Today Rasi Palan – இன்றைய ராசிபலன் – 22.09.2024

Today Rasi Palan – 22.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 6-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை.

நட்சத்திரம்: இன்று காலை 6.35 வரை பரணி பின்பு கார்த்திகை.

திதி: இன்று இரவு 9.44 வரை பஞ்சமி பின்பு சஷ்டி.

யோகம்: சித்தயோகம். கீழ்நோக்குநாள்.

 

நல்லநேரம் காலை : 7.45-8.45

நல்லநேரம் மதியம் : 2.00-3.00

ராகுகாலம் காலை : 4.30-6.00

எமகண்டம் மதியம் : 12.00-1.30

குளிகை மாலை: 3.00-4.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: கன்னி, துலாம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்


கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கல்யாணக்கனவுகள் நனவாகும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்


நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். உடல்நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீடு. இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

மிதுனம்


புகழ் கூடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறும்.

கடகம்


சொன்ன சொல்லை நிறைவேற்றும் நாள். தொலைபேசி வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.

சிம்மம்

உற்சாகம் அதிகரிக்கும் நாள். பல நாட்களாக செய்ய நினைத்த வேலையொன்றை இன்று செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

கன்னி


யோசித்து செயல்பட வேண்டிய நாள். அதிகாரிகளால் தொல்லை உண்டு. வரவு வருவதற்கு முன்னரே செலவுகள் காத்திருக்கும். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம்.

துலாம்


மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பச்சுமை கூடும். விரயங்களை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். நட்பு பகையாகலாம். உறவினர்கள் உங்கள் செயல்பாட்டில் குறை கூறுவர்.

விருச்சிகம்


நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

தனுசு


எதிர்பாராத விதத்தில் நல்ல சம்பவம் நடைபெறும் நாள். சவால்களை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும்.

மகரம்


சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. உத்தியோகத் தடை அகலும்.

கும்பம்


குதூகலம் கூடும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அயல்நாட்டு நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள்.

மீனம்


வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *