Giorgia Meloni: உறவை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு!

Advertisements

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தனது நண்பருடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இத்தாலியின் பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி, ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார். தொலைக்காட்சிப் பத்திரிகையாளரான  ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோ இத்தாலி பிரதமர்  ஜியோர்ஜியா மெலோனியின் சிறந்த  நண்பர்.

ஜியோர்ஜியா மெலோனி  சமீபத்தில் சமூக வலைதளங்களில் பாலியல் கருத்துகளைத் தெரிவித்து வந்துள்ளார். இதனால் பெரும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அக்டோபர்  20-ஆம் தேதி இத்தாலிப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தனது நண்பர் ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவுடனான உறவை முறித்துக் கொண்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள்  ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவுடன் நல்ல நட்பில் இருந்துள்ளேன். ஆனால் இனி அவருடன் நட்பு பாராட்ட விரும்பவில்லை.  நாங்கள் ஒன்றாகக் கழித்த அற்புதமான வருடங்களுக்காகவும், நாங்கள் கடந்து வந்த சிரமங்களுக்காகவும், என் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயத்தை எனக்குக் கொடுத்ததற்காகவும் அவருக்கு நன்றி கூறுகிறேன் என்று  x தளத்திலும், முகநூல் பக்கத்திலும்  உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில  காலமாக எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததால் தற்போது பிரியும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், எங்கள் நட்பை நான் பாதுகாப்பேன் என் ஏழுவயது மகளையும் நான் நல்ல முறையில் வளர்ப்பேன் என்றும் கனத்த இதயத்துடன் இதைப் பகிர்வதாகக் கூறிய அவர் இதற்கு மேல்  நான் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. பி.எஸ். வீட்டில் என்னை அடிப்பதன் மூலம் என்னைப் பலவீனப்படுத்த நினைத்தவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், அந்தத் துளி கல்லைத் தோண்டி எடுக்க எவ்வளவு எதிர்பார்த்தாலும், கல் கல்லாகவே இருக்கும், துளி தண்ணீராக மட்டுமே உள்ளது, என்று அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *