
ரஷியா 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திடீரென உக்ரைனுக்கு எதிராகப் போர் தொடங்கியது. அதன் பின்னர், சுமார் மூன்று ஆண்டுகளாக இரு நாடுகளுக்கிடையில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. போர் ஆரம்பத்தில், ரஷியா உக்ரைனின் கிழக்குப் பகுதியில் பல பகுதிகளைக் கைப்பற்றியது. பின்னர், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியதால், ரஷியா பல இடங்களில் பின்வாங்கத் தொடங்கியது.
தற்போது, இரு நாடுகளும் டிரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு உள்ளன. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
கடந்த மாதம், உக்ரைன் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் ராணுவ ஆயுத கிடங்குகளை டிரோன் மூலம் தாக்கியது. இதனால் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவிலான இழப்புகள் ஏற்பட்டன.
