Delimitation Issue : தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை..!

சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தில்லி நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில்,  இந்த மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாட்டின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக நாடளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *