
லாட்ஜிக்கு வரவழைத்த சிறுமியை மிரட்டிக் காதலனின் நண்பரும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி: ஒடிசா மாநிலம், காலாஹண்டி மாவட்டம் பனிமுந்திராவை சேர்ந்தவர் 44 வயது காவலாளி.
இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஞ்சரபாலத்தில் தங்கி இருந்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவரது 17 வயது மகள் துறைமுக குடியிருப்பில் உள்ள கடற்படை அதிகாரி வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்து வந்தார்.சிறுமி உள்ளூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி சிறுமி தனது காதலுடன் லாட்ஜிக்கு சென்றார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர். பின்னர் காதலன் தனது நண்பர்களுக்குப் போன் செய்து லாட்ஜிக்கு வர வழைத்தார். சிறுமியை மிரட்டிக் காதலனின் நண்பரும் பலாத்காரம் செய்தார்.
பின்னர் லாட்ஜிலிருந்து வெளியே வந்த சிறுமி இதுகுறித்து தனக்கு தெரிந்த போட்டோகிராபர் ஒருவரிடம் கூறினார். சிறுமிக்கு ஆறுதல் கூறிய போட்டோகிராபர் ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக அழைத்துச் சென்றார். பின்னர் அங்குள்ள அறைக்கு அழைத்துச் சென்ற போட்டோகிராபர் மேலும் தனது 7 நண்பர்களைப் போன் செய்து வர வழைத்தார்.8 பேரும் சேர்ந்து சிறுமியை 1 வாரம் அறையில் அடைத்து மாறி மாறிப் பலாத்காரம் செய்தனர். இதில் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பலாத்காரம் செய்த வாலிபர்கள் அவரை ஒரிசாவில் உள்ள சொந்த ஊரில் விட்டு விட்டு வந்தனர். வேலைக்குச் சென்ற மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது இளம் பெண் தனது சொந்த ஊரில் இருப்பது தெரியவந்தது.
அவரை மீண்டும் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருந்த சிறுமி போலீசாரிடம் பேச முடியாத அளவுக்குப் பாதிப்பு அடைந்து இருந்தார்.
பின்னர் தனக்கு நடந்த கொடுமைகள்குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறுமியைப் பலாத்காரம் செய்த 8 வாலிபர்களைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.



