Land reclamation: 500 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு!

சென்னை ஆலந்தூர் அருகே பட் ரோட்டில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு நிலங்களைத் தமிழக அரசு மீட்டு வருகிறது.அந்தவகையில்  சென்னை ஆலந்தூர் அருகே பட் ரோட்டில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த ரூ.500 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது.

1.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துச் சிலர் வீடு கட்டி பயன்படுத்தி வந்த நிலையில் பல்லாவரம் வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். போலி ஆவணங்கள்மூலம் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நிலம் மீட்கப்பட்டது.போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் மீட்டு பணியில் ஈடுபட்டனர்.இதனால் அந்தப் பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *