ஜப்பான் நீச்சல் போட்டி: உலக சாதனை படைத்த பிரான்ஸ் இளம் வீரர்!

Advertisements

ஃபுகுவோகா: ஜப்பானில் ஃபுகுவோகாவில் உலக அக்வாடிக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர்களுக்கான தனிநபர் 400 மீட்டர் மெட்லே வகை நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டின் இளம் வீரர் லியோன் மர்சந்த், 400 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்கள் 2.50 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் லியோன் மர்சந்த், தங்கப் பதக்கம் வென்றதோடு, புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.

முன்னதாக 2008ம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியா ஸ்விம்மிங் ஜாம்பவான் பெல்ப்ஸ், 400மீ தனிநபர் மெட்லே வகை நீச்சல் போட்டியில், பந்தய இலக்கை 4 நிமிடங்கள் 3.84 வினாடிகளில் கடந்திருந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை லியோன் மர்சந்த் முறியடித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *