பரமக்குடி – இராமநாதபுரம் இடையே 46 கி.மீ தொலைவுக்கு நால்வழிச்சாலை அமைக்க ஒப்புதல்..!

தமிழ்நாட்டின் பரமக்குடி – இராமநாதபுரம் இடையே 46 கிலோமீட்டர் தொலைவுக்கு 1853 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நால்வழிச்சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து குமுளி, மதுரை, இராமநாதபுரம் வழியாக இராமேஸ்வரம், தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலை 87 செல்கிறது. இந்தத் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், மண்டபம், இராமேஸ்வரம், தனுஷ்கோடி சாலை இப்போது இருவழிச்சாலையாக உள்ளது.

இதில் பரமக்குடி முதல் இராமநாதபுரம் வரை 46 கிலோமீட்டர் தொலைவுக்கு 1853 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நால்வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ,து தமிழ்நாட்டின்  வளர்ச்சிக்கு மகத்தான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்தத் தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன் பொருளாதார வளர்ச்சியையும்  சுற்றுலாவைவையும் அதிகரிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *