முன்னாள் பிரதமர் ஷேக் பூர்விக வீட்டுக்கு தீ வைப்பு!

Advertisements

டாக்கா:

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நடந்த மாணவர் போராட்டத்தில் பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாகப் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இதையடுத்து வங்கதேசத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அங்கு இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பு வகித்து வருகிறார்.

வங்கதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத்தோ்தலில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்பட மாட்டாது என இடைக்கால அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இதற்கிடையே, அவாமி லீக்கின் தற்போது கலைக்கப்பட்ட மாணவர் பிரிவான சத்ரா லீக், ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி நேற்று இரவு ஷேக் ஹசீனா உரையாற்றுவாரென அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா நேரலையாக ஆன்லைனில் உரையாற்ற இருப்பதாகத் தகவல் பரவியது.

இந்நிலையில், வங்கதேசத்தில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் வீட்டைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி தீ வைத்தனர்.

போராட்டக் குழு டாக்காவில் உள்ள அவரது வீட்டைச் சேதப்படுத்தி தீ வைத்தது. போராட்டக்காரர்கள் பலர் வீட்டின் இரண்டாவது மாடியில் ஏறி, கடப்பாரைகள் மற்றும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *