Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 23.12.2023

Advertisements
மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே எதிர்பார்த்த வகையில் பணம் வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வந்து கைகொடுக்கும். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளியூர் பயணம் ஏற்படக் கூடும். தந்தை வழி உறவால் பயன் உண்டு. உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். இன்று ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வணங்க இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 9.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே பிரச்சினைகளைத் தீர்க்க நல்ல வழி கிடைக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். உங்களின் தைரியம் கூடும். தாயார் ஆதரவாக இருப்பார். நண்பர்கள் உதவவும் முன் வருவார்கள். லாட்டரி ரேஸ் போன்றவற்றில் லாபம் ஏற்படும். இன்று குபேர லிங்கத்தை வழிபட இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 3.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வீடு கட்டுவதற்கு, வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். உடல் நலத்தில் சிறிது அக்கறை தேவை. பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சியை காண்பீர்கள். மேலும் இன்று பைரவரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்று அதிர்ஷ்ட 1.

கடகம்

 

கடக ராசிக்காரர்களே தூக்கம் குறையும். அதனால் உடல் நிலையை சிறிது அசௌகரியம் ஏற்படும் .உங்களது திறமைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பது நல்லது. சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நண்பர்களின் உதவிகள் அதிகரிக்கும். இன்றைய தக்ஷனா மூர்த்தி வழிபட இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 2.

 

சிம்மம்

 

சிம்மராசி காரர்களே குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும் மின் சாதனங்கள் வாங்க வழிகள் கூடும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள். மேலும் இன்று  பெருமாளை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 4.

கன்னி

 

பழைய நகையை மாற்றி புது  ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். கனிவாகப் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து விடுவீர்கள். மேலும் உங்கள் ஆற்றல் கூடும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். தாய் வழி உறவால் ஆதாயம் உண்டு. மேலும் இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

 

துலாம்

 

துலா ராசி காரர்களே திடீர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் மீண்டும் இணைவார்கள் மனைவிவழியில் உதவிகள் உண்டு. பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். மலைப்பிரதேச பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும். தியானம் மற்றும் யோகா  மனதை உற்சாகப்படுத்தும். என்று நீங்கள் காளிதேவியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 5.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே தடைபட்ட காரியங்களை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்கள். தள்ளிப்போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். அரசாங்க காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலிடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பங்கு மார்க்கெட்டில் லாபம் உண்டு. இன்று சுக்கிர பகவானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிஷ்ட எண் 7.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே திடீர் செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற பழமையான புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கொடுத்த கடன் திரும்ப வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மேலும் இன்று நீங்கள் ஆறுமுகனை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 1.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து மோதல்கள் நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். வம்பு வழக்கு தீரும். பகை தீரும்
வங்கி கணக்கில் கணிசமான தொகை உயர வாய்ப்புண்டு. மேலும் இன்று நீங்கள் புதபகவானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 3.

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களே பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிரபலங்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணம் லாபகரமாக அமையும். இன்று ஹயக்ரீவரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர்.பழைய கடன்களை ஒவ்வொன்றாக தீர்க்க வழி கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. மேலும் இன்று நீங்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 8.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *