
இன்றைய சமூக வலைத்தளங்களில் தினமும் பல வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றில் சில விமர்சனங்களை, சில வரவேற்புகளை பெற்றுள்ளன. வரவேற்பைப் பெற்ற இளம்பெண்ணின் வீடியோ அவரது வாழ்க்கையை மாற்றியதாகக் கூறுவது மிகையாகாது.
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சியில் ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா என்ற பெண், காந்த கண்ணால் ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் வைரலானார். இதற்குப் பிறகு, மோனலிசாவை சினிமாவில் நடிக்க வைப்பதாக இயக்குநர் ஒருவர் பொதுவாக அறிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோனலிசா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நகைக்கடையை திறந்து வைத்துள்ளார்.
தொழிலதிபர் பாபி செம்மனூர் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடையை மோனலிசா திறந்து வைப்பதாக வெளியான தகவலுக்குப் பிறகு, நூற்றுக்கணக்கானோர் அங்கு வந்துள்ளனர்.
