
மயிலாடுதுறை மாவட்டத்தில் 25-ஆம் தேதி ரேஷன் கடை பணியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு தொடங்குகிறது என்று கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறும்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 40 விற்பனையாளர் மற்றும் 5 கட்டுனர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.அது பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு வருகிற 25-ஆம் தேதி முதல் 3.12.24 வரை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக 7-ம் தளத்தில் நடைபெறவுள்ளது.எனவே, நேர்முக தேர்விற்கான அனுமதி சீட்டினை மயிலாடுதுறை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணைய தளமான https://www.drhmytin என்ற இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் விண்ணப்பதாரர்கள் myddrbagmail. com என்ற இ-மெயில் மூலமும், உதவி மைய தொலைபேசி எண் 04364-227752 வாயிலாகவும், மயிலாடுதுறை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.




