Sivaganga: ஓட்டலில் தாசில்தார் பெண்ணுடன் உல்லாசம்.. ஸ்டேட்டஸால் அம்பலமான வில்லங்கம்!

Advertisements

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராகப் பணியாற்றும் ராஜரத்தினம் என்பவர் பெண் ஒருவருடன் தனியார் விடுதி அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் காரணமாக இந்த வில்லங்க வீடியோ வெளியானதாகச் சொல்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தாசில்தாராக இருப்பவர் ராஜரத்தினம், இவ்ர் ஒரு பெண்ணுடன் ஓட்டல் அறையில் உல்லாசமாக இருப்பது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சம்பந்தப்பட்ட உல்லாச வீடியோவை அரசு அதிகாரியான அவரே வாட்சப் செயலியில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. தாசில்தாரின் வாட்ஸ் ஆப் செயலியிலிருந்து டவுன் லோட் செய்து, வீடியோவைப் பலரும் பகிர்ந்து சமூக வலைதளங்களில் வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட வீடியோவில் சிக்கிய அதிகாரிக்குச் சிக்கல் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்பவர் என்பதால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகங்கை மாவட்ட உயர் அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். ஆபாச வீடியோவைப் பொது இடத்தில் பலரும் பார்க்கும் படி பகிர்ந்த குற்றத்திற்காகத் தாசில்தார் ராஜரத்தினம் மீது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தானாக முன்வந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையில், இது போன்ற விவகாரங்களில் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் , சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சமூக ஊடங்களில் சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள் முன்னதாக இந்த அரசு அதிகாரி பணியாற்றிய இடங்களில் இது போன்ற பாலியல் புகார்களில் சிக்கியவர் எனக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *