Sandeep Lamichhane: கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை!

Advertisements

பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.

காத்மாண்டு: நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சேன். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காகக் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார்.

இந்த நிலையில் சந்தீப் லமிச்சேன் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து இருந்தார். அந்தப் புகாரில், கடந்த ஆகஸ்ட் 21-ந்தேதி காத்மாண்டு ஓட்டல் ஒன்றில் சந்தீப் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப் லமிச்சேன், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே நேபாள கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சேனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் சந்தீப்பை குற்றவாளியெனக் காத்மாண்டு கோர்ட்டு அறிவித்து இருந்தது. அவருக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் சந்தீப் லமிச்சேனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *