Fake Love: காதலனையை கோடாரியால் வெட்டி கொலை செய்த காதலி!

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனையை தூங்கும்போது கோடாரியால் வெட்டி கொலை செய்த காதலி ஜார்க்கண்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் பதான் காவல்நிலையத்திற்குட்பட்ட கொலுவா கிராமத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் உடலை கைப்பற்றி விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.தொடர்ந்து விசாரணையில் அஞ்சலி குமார் என்ற 20 வயது இளம்பெண்ணின் உடையில் ரத்த கறை இருந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில், அஞ்சலிகுமார், 24 வயதான தர்மன் என்பவருடன் உறவில் இருந்து வந்துள்ளார். அஞ்சலை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியும் தர்மன் அதை மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி தர்மனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். வழக்கம்போல் தர்மனை புல்தரைகள் நிறைந்த பகுதியில் சந்தித்த அஞ்சலி அவருடன் சில நேரம் பேசியுள்ளார்.
பின்னர் தர்மன் தரையில் படுத்து தூங்கியதும், தான் மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து அவரை வெட்டி கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளதில் காதலன் இறந்ததை பார்த்த அஞ்சலி உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். விசாரணையில் இந்த தகவல்களை சேகரித்த போலீசார் அஞ்சலியின் உடலில் இருந்த ரத்தக் கறையையும், கொலை செய்ய பயன்படுத்திய கோடாரியையும் பறிமுதல் செய்ததுடன், இளம்பெண்ணை கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு, காதலியை ஆதாரங்களுடன் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனை காதலியே கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *