Chennai Csk Team ; சென்னை அணி ஏலம் எடுத்த பிரசாந்த் வீர் யார்.?

30 லட்சம் முதல் 14 கோடி … சென்னை அணி ஏலம் எடுத்த பிரசாந்த் வீர் யார்?

ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை அணி பிரசாந்த் வீர் என்ற வீரரை 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை, இந்திய அணிக்காக இவர் விளையாடியதில்லை. அப்படியிருக்கும் நிலையில், இத்தனை கோடி கொடுத்து பிரசாந்த் வீர் வாங்கப்பட்டதுதான் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்டகாசமான பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் என்று பிரசாந்த் வீரை தாராளமாக சொல்லலாம்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி நகரில் 2005ம் ஆண்டு பிறந்தவர். சமீபத்தில் முடிவடைந்த, 23 வயதுக்குட்பட்ட சையது முஸ்டாக் அலி தொடரில் உத்தரபிரதேச அணிக்காக 6 ஆட்டங்களில் இவர்  112 ரன்களை எடுத்தார். ஸ்ட்ரைக் ரேட் 170 ஆகும். அதோடு, 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இப்போதைக்கு ஜடேஜா அணியில் இல்லாத நிலையில், ஒரு ஸ்பின்னர் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே, லெக் ஸ்பின்னரான பிரசாந்த் வீரை சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது. இவரின், அடிப்படை விலை 30 லட்சமாக இருந்தது. ஹைதரபாத் அணியும் பிரசாந்த் வீரை ஏலம் எடுக்க 14 கோடி வரை போட்டி போட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *