முகமது ஷமிக்கு ஓகே சொன்ன பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள தயார் என அறிவித்திருக்கும் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக பந்துவீசி அசத்திக் கொண்டிருக்கிறார் முகமது ஷமி. அவருக்கு இப்போது திருமண வாய்ப்பு தேடி வந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் வெளிப்படையாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.Payal Ghosh
அதில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள நான் தயார், ஆனால் ஒரு கண்டிஷன் என தெரிவித்துள்ளார். அது என்ன கண்டிஷன் என்றால் முகமது ஷமி தன்னுடைய ஆங்கில புலமையை மேம்படுத்த வேண்டும், அதற்கு ஓகே சொன்னால் உலக கோப்பைக்குப் பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.