
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட போதை பொருள் கடத்தல் குற்றவாளி சாதிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பில்லையென ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.ஆனால் இயக்குனர் அமீர் மட்டும் எனது நெருங்கிய நண்பர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாகப் புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன்.
தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் சம்பந்தமாகத் திமுக பிரமுகர் சாதிக் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை தான் சினிமா தயாரிப்பாளராக இருப்பதாகவும் இயக்குனர் அமீர் மட்டுமே தனக்கு வேண்டப்பட்டவர் என்று தெரிவித்த அவர்.
தனக்கு வேண்டப்படாதவர்கள் என்மீது அரசியல் காழ் புணர்ச்சியோடு சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் ராஜேந்திரன் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து இது போன்று அவதூறை பரப்பினால் சட்டரீதியாக அவர்களை எதிர்கொள்ள உள்ளதாகவும் ராஜேந்திரன் தெரிவித்தார்.
மேலும் பேடியின்போது ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் நிர்வாகிகள் என அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.


