EPS Vs DMK: இபிஎஸ்ஸுக்கு எதிராக ரூ.1 கோடி கேட்டுத் திமுக மான நஷ்ட வழக்கு!

Advertisements

சென்னை: ‘போதைப் பொருள் பறிமுதல் மற்றும் கைது விவகாரங்களில் திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். ரூ.1 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் போதைப்பொருட்கள் பறிமுதல் மற்றும் கைது விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார். இது கட்சிக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, போதைப்பொருள் பறிமுதல் மற்றும் கைது விவகாரங்களில் திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். ரூ.1 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தார்.

முன்னதாக, போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *