
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 304 ரன்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 308 ரன்களை குவித்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 300 ரன்களுக்கும் மேல் அடித்தபோதிலும், இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கும் மேல் அடித்தும் அதிக தோல்வியைத் தழுவிய அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.
இதுவரை 99 போட்டிகளில் 300-க்கும் அதிக ரன்களை அடித்துள்ள இங்கிலாந்து அணி இவற்றில் 28 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய அணி 136 போட்டிகளில் 300-க்கும் அதிக ரன்களை அடித்துள்ளது. இதில் 27 போட்டிகளில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்துள்ளது.
