ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அரை சதம் – ஜோ ரூட்!

Advertisements

கட்டாக்:

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.5 ஓவரில் 304 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்னும், பென் டக்கெட் 65 ரன்னும் அடித்தனர்.

இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த அரைசதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 56-வது அரை சதமாகப் பதிவானது.

இதன்மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்தார்.

இயன் மோர்கன் 55 அரை சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.

அதிகபட்ச அரை சதம் கடந்தோர் பட்டியல்:

ஜோ ரூட் – 56, இயன் மோர்கன் – 55, ஐயன் பெல் – 39, பட்லர் – 38, கெவின் பீட்டர்சன் – 34

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *