Encounter: “பெண் போலீஸை அடிப்பியா?

Advertisements

போலீசாரை துப்பாக்கியால் சுட்டதால் வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்ப்பட்டது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். 2 பேர் காயமடைந்துள்ளனர். அதோடு போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்துள்ளார்…

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் ரயிலில் பெண் போலீசை கொடூரமாகத் தாக்கிய நபரைப் போலீசார் அதிரடியாக என்கவுண்ட்டர் செய்தனர். இதில் அவர் பலியான நிலையில் அவரது கூட்டாளிகள் 2 பேர் குண்ட காயமடைந்த நிலையில் சம்பவத்தின்போது நடந்த துப்பாக்கிச்சண்டை குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து பிரயாக்ராஜ்சங்கம் வரை சரயு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி இந்த ரயிலில் பெண் போலீஸ் பயணித்தார். அப்போது அவர்மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அந்தப் பெண் முகம், தலையில் பலத்த காயமடைந்தார். ரத்த வெளத்தில் அவர் ரயிலியில் உயிருக்குப் போராடினார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.

இந்நிலையில் தான் அவர் பதுங்கி இருக்கும் இடத்தைப் போலீசார் கண்டுபிடித்தனர். சிறப்பு அதிரடி படையினர் மற்றும் போலீசார் அவர்களைக் கைது செய்ய முயன்றனர். அப்போது அனிஷ் கான் உள்பட 3 பேர் இருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தற்காப்புக்காகப் போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் அனீஷ் கான், ஆசாத், விசாம்பர் தயால் உள்ளிட்ட 3 பேரும் குண்டுகாயமடந்த நிலையில் போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது அனீஷ் கான் இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அயோத்தி சீனியர் எஸ்பி ராஜ் கரண் நயார் கூறுகையில், ‛‛நாங்கள் தொழில்நுட்பம் மற்றும் ரகசிய தகவல் அடிப்டையில் அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தோம். அதோடு தாக்குதல் நடத்தியவரைப் போட்டோமூலம் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அடையாளம் காட்டினார். அதனடிப்படையில் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது போலீசாரை துப்பாக்கியால் சுட்டதால் வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்ப்பட்டது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். 2 பேர் காயமடைந்துள்ளனர். அதோடு போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்துள்ளார்” என்றார். ரயிலில் பெண் போலீஸ் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் போலீசார் என்கவுண்ட்டரில் இறந்திருப்பது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு பிற ரவுடிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *