வயிற்றெரிச்சலில் புலம்பும் எடப்பாடி பழனிசாமி!

Advertisements

ஈரோடு:

திமுகவின் வெற்றியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திமுக அரசு சார்பில் தொடர்ந்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கூறியபடியே திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. அதனால் மக்கள் ஆதரவு கிடைக்கிறது என்ற வயிற்றெரிச்சல் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புலம்பிக் கொண்டே இருக்கிறாரென முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் முக ஸ்டாலின 50,088 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்தார். தொர்ந்து அவர் பேசுகையில், திராவிட மாடல ஆட்சியைக் கேரள மாநில மக்கள் பாராட்டுகின்றனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவு ஈரோடு மக்களுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்திக்கடவு, அவினாசி திட்டத்தின் மூலம் ஈரோட்டில் உள்ள ஏரிகளுக்குத் தண்ணீர் கிடைத்து வருகிறது. வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவிட்டு அதனைக் கண்டுகொள்ளாமல் போகும் அதிமுக அரசு மாதிரி இல்லை இந்த அரசு. சொன்னதை செய்வோம் என்று செய்து காட்டிய கருணாநிதி வழியில் நக்கும் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு. திமுக அரசில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி பகுதியில் உள்ள சாலையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும். 50 கிராமங்களில் 15 கோடி ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குக் கூடுதல் கட்டடம் கட்டப்படும். தொடர்ந்து திட்டங்கள் அனைத்தும் தந்து கொண்டிருப்பதால் எங்களுக்குத் தொடர் வெற்றியை மக்கள் கொடுத்து வருகின்றனர்.

திமுகவின் இந்த வெற்றியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திமுக அரசு சார்பில் தொடர்ந்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கூறியபடியே திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. அதனால் மக்கள் ஆதரவு கிடைக்கிறது என்ற வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம். அதில் எந்தவொரு தவறும் கிடையாது. ஆனால், நியாமான புகார்களைச் சொல்ல வேண்டும். திமுக ஆட்சிமீது குற்றம்சாட்ட எதுவும் கிடைக்காமல் பொய்களைச் சொல்லக் கூடாது. எடப்பாடி பழனிசாமி தனிநபராகப் பொய் சொல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராகத்தான் பொய்களைச் சொல்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்தச் செயல் அவர் வகித்து வரும் பதவிக்கு அழகில்லை. வளர்ச்சிப் பணிகள், நிவாரணப் பணிகள் என எதற்காகவும் மத்திய அரசிடமிருந்து நிதிக்காகக் காத்துக்கொண்டு இருக்காமல் அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைப் பழனிசாமியால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதனால், திமுக அரசுமீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

திருவண்ணாமலை, சாத்தனூர் அணையை எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திறந்து விட்டதாகப் பொய்யைப் பரப்பி வருகிறார். செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதால் 200 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அதனை எல்லாம் பொதுமக்கள மறந்து விட்டார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் நினைக்கிறாரா.

செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு செயற்கைப் பேரிடரை ஏற்படுத்தியது அதிமுக அரசு. செந்தில் கவுண்டமணி காமெடிபோல டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சட்டசபையில் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது நான் உறுதியாக, முதல்வராக இருக்கும் வரை அனுமதிக்க மாட்டோம் என்று தெளிவாகக் கூறினேன் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *