7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி.!

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளிடையான மூத்தோர்களுக்கான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், இந்திய, ஆஸ்திரேலிய மூத்தோர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது.

இதைத் தொடர்ந்து, மழையின் காரணமாக போட்டி 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.

இதில், அதிகப்பட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *