Tvk conference : 2 ஆவது மாநில மாநாட்டை முன்கூட்டியேத் தொடங்கத் திட்டம்

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டை முன்கூட்டியேத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் களப்பணிகளை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் முதல் தேர்தலிலேயே முத்திரைப் பதிக்கத் தமிழக வெற்றிக் கழகம் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதில் அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடந்த நிலையில், இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் பிரமாண்டமாக நடக்க உள்ளது.

இந்த மாநாட்டிற்கு நள்ளிரவு முதலேத் தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளனர். இதனால் மாநாட்டை 4 மணி முதல் 7 மணி வரை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *