Vietnam: தீ விபத்தில் 54 பேர் பலி!

Advertisements

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 54 பேர் உயிரிழந்தனர்…

ஹனொய்: வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனொய் நகரில் 9 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் இரவு வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், குடியிருப்பில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்தத் தீ விபத்தில் 54 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *