பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும்..!

குனியமுத்தூரில் உள்ள எஸ்.டி.பி.ஐ.மகளிர் அணி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள எஸ்.டி.பி.ஐ.மகளிர் அணி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மகளிர் அணி மாவட்ட தலைவர் ஜன்னத்துல் பிர்தௌஸ் தலைமை வகித்தார்.இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக மாமன்ற உறுப்பினர்கள் அலிமா ராஜா உசேன்,காயத்ரி,தமிழ் புலிகள் கட்சி மாவட்ட தலைவர் வனிதா,பெரியார் திராவிடர் கழக லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மகளிர் அணி மாநில தலைவர் பாத்திமா கனி கலந்து கொண்டு பேசியபோது, பெண்கள் அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பெண்கள் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல் அதிகாரத்தில் இருப்பவர்களாக பெண்கள் மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதில்,  கலந்து கொண்ட அனைவருக்கும் பேரீச்சம்பழம்,ஜூஸ்,நோன்பு கஞ்சி  உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *