Durgawati Devi: பிறந்த தினம்!

Advertisements

அக்னி துர்கா தேவி பிறந்த தினம்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்கா தேவி 1907-ஆம் ஆண்டு அக்டோபர் ‘07 -ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் பிறந்தார். இந்திய விடுதலைப் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த பகவதி சரண் ஹோரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட்  ரிபப்ளிக் கட்சியின் செயல் துடிப்பு மிக்க உறுப்பினராக மாறினார்.

கணவன் மனைவி இருவரும் தங்கள் வருமானத்தை விடுதலைப் போராட்ட இயக்கத்துக்குச் செலவழித்தனர். லாலா லஜ்பதி ராய் மரணத்திற்கு பழி வாங்குவதற்காகத் திட்டம் தீட்டப்பட்ட கட்சியின் கூட்டம் இவரது தலைமையில்  நடைபெற்றது. பஞ்சாப் சிங்கத்தின் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரி ஸ்காட்டை கொலை செய்யத் திட்டமிடப்பட்டு, பின்பு பகத் சிங் மற்றும் சுக்தேவ்விடம் ஒப்படைக்கப்பட்டது.

தனது கணவர் மறைவிற்குப் பிறகு லக்னோவில் 1940-ல் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் திறந்தார். `இந்திய அக்னி’ எனப் போற்றப்பட்ட சிறந்த பெண் சுதந்திரப்  போராட்ட  வீராங்கணை 1999-ஆம் ஆண்டு தனது 92 வயதில் காலமானார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *