Chennai : எண்ணூரில் 13 செண்டிமீட்டர் மழை பதிவு..!

மோந்தா’ தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்றிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. அதிக அளவாக எண்ணூரில் 13 செண்டிமீட்டர மழை பதிவாகியுள்ளது.

புயலின் தாக்கத்தால் சென்னை, திருவான்மியூர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, உத்தண்டி ஆகிய கடற்கரைப் பகுதிகளில் கடல் அலைகள் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றன.பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாகச் சென்னை எண்ணூரில் 13 செண்டிமீட்டரும், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 11 செண்டிமீட்டரும், சென்னை கத்திவாக்கத்தில் 10 செண்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *