எளிமையான முறையில் நடைப்பெற்ற நடிகர் கிருஷ்ணா திருமணம்…

Advertisements

நடிகர் கிருஷ்ணாவின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

2008ம் ஆண்டு நீளன் இயக்கத்தில் வெளியான அலிபாபா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா.அப்படத்தை தொடர்ந்து கற்றது களவு, கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் வெப் தொடரிலும நடித்து வருகிறார்.பிஸியாக படங்களில் நடித்துவந்த கிருஷ்ணா மிகவும் எளிமையான முறையில் தனது திருமணத்தை முடித்துள்ளார்.

அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மனைவியுடன் எடுத்த திரைப்படங்களை பகிர்ந்து புதிய ஆரம்பம் என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் அதிகமான லைக்குகள் மற்றும் கமெண்டுகள் பெற்று வருகிறது.

கிருஷ்ணாவிற்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. ஆனால் ஒரு வருடத்தில் அது விவாகரத்தில் முடிந்து விட்டது. இப்போது அவர் இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *