Durai Murugan: நாங்க படாப் படா ஆள் இல்லை சார், சோட்டா சோட்டா ஆளுங்க.. மோடிக்கு துரைமுருகன் பதில்!

Advertisements

திமுகவை நசுக்கிடுவோம் என மோடி பேசுகிறார், நாங்கள் என்ன மகாபலிபுரம பாறையா நசுக்க நாங்க படாப் படா ஆள் இல்லை சார், சோட்டா சோட்டா ஆளுங்க எங்கள ஒன்னும் பண்ண முடியாது என குடியாத்தத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர்ஆனந்த் அறிமுக கூட்டம். குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், யாராக இருந்தாலும் அண்ணா பேரைச் சொன்னால் தான் தமிழகத்தை ஆள முடியும்.மண்டை இருக்கும் வரை சளி இருக்கும் அதுபோலக் குடியாத்தம் இருக்கும் வரை குரூப்பிசாம் போகது என்றார் அண்ணா. திமுகவை நசுக்கிடுவோம் என மோடி பேசுகிறார்நாங்கள் என்ன மகாபலிபுரம பாறையா நசுக்க.நாங்க படாப் படா ஆள் இல்லை சார், சோட்டா சோட்டா ஆளுங்க எங்கள ஒன்னும் பண்ண முடியாது.
ராஜகோபால ஆச்சாரியர் எங்களை மூட்டைப் பூச்சிபோல் நசுக்குவேண் என்றார் ஆவரையே நாங்கள் நாடாளுமன்றத்திலிருந்து மூட்டைக் கட்டி அனுப்பிவிட்டோம்.

லால்பகதூர் சாஸ்திரி – தனிநாடு கேட்டா கட்சியைத் தடை செய்வேன் என்றார் அதைச் சாமர்த்தியமாக முறியடித்தவர் அண்ணா குருசோத்திரத்தில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போலத் தனிநாடு தடை சட்டத்தைக் கையாண்டார் அண்ணா.

அண்ணாவை மட்டும் கருணாநிதி (கலைஞர்) சந்திக்காமல் இருந்திருந்தால் கலைஞர் கம்யூனிஸ்ட் வாதியாகி இருந்திருப்பார். அவர் ஒரு சமூகநீதி காரர். இதை அண்ணாவே சொல்லி இருக்கிறார்.

நான் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் சங்கத்திலிருந்து அப்போது கல்லூரி சார்பில் எம்ஜிஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்தார்கள் நான் இதனை உடனடியாகக் கலைஞரிடம் போய்ச் சொன்னேன் அதற்குக் கலைஞர் சொன்னார் எம்ஜிஆர் திரையில் ஆற்றிய தொண்டுக்கு டாக்டர் பட்டத்திற்கு மிகப் பொருத்தமானவர் அவர் நீயே அதை முன்மொழிந்து செய்ய வேண்டும் எனச் சொன்னார்.

இதை அப்படியே எம்ஜிஆர்ிடம் சொன்னபோது தலைவரா அப்படி சொன்னாரென மிக உருக்கமாகப் பேசினார் எம்ஜிஆர். அப்படி எம்ஜிஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்பதை தடுத்து வழங்கச் செய்தவர் கலைஞர்.திமுகவை பார்த்து நசுக்கி விடுவேன் உடைத்து விடுவேன் எனப் பேசுகிறார் பெரியவர் மோடி திமுக காரன் வெளியில் வரும்போது வாயில் வாக்கரிசியை போட்டுக் கொண்டு வருபவன் எதற்கும் துணிந்தவன் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனப் பேசினார்.

நாங்கள் ஏன் சொன்னதையே திரும்பத் திரும்ப மேடைகளில் சொல்கிறோம் என்றால். திரும்பத் திரும்பச் சொல்லவில்லை என்றால் சீதைக்கு சித்தப்பா ராவணன் என்று விடுவார்கள். எனப் பேசினார்
இதில் சட்ட மன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அமலுவிஜயன், நகர் மன்ற தலைவர் சௌந்தராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பல ர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *