Durai Murugan: சிறிய வார்த்தைகளை மோடி பயன்படுத்துவது அவருக்கு அழகல்ல!

Advertisements

பிரதமர் நரேந்திர மோடி மதிப்புக்குரியவர், சாலச் சிறந்தவர்அப்படிப்பட்டவர் சிறிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது அவருக்கு அழகல்ல என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே பொன்னையாற்றின் குறுக்கே மாநில நிதி, திட்டத்தின் கீழ் ரூபாய் 12.94 கோடி மதிப்பீட்டில் 190 மீட்டர் நீளத்திற்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேல் பாடி பகுதியில் தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு மூன்று கோடி கட்டப்பட்டது. பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாகபாலம் உடைந்து போனது.அதன் பிறகு தற்போது 12.94கோடி மதிப்பீட்டில் தற்பொழுது கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம்மிகவும் பலம் வாய்ந்தது.மேலும் இந்தப் பகுதியில் உள்ள சாலை பணிகள்தேர்தல் முடிந்தவுடன்சரி செய்யப்படும். என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்.திமுகவும் காங்கிரசும் ஊழல் கூட்டணி அதனை வீழ்த்துவது என்னுடைய முதல் வேலையெனப் பிரதமர் கூறியுள்ளாரேயெனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மிகுந்த மரியாதைக்குரியவர், அவர் சாலச் சிறந்தவர்.அவர் இப்படிப்பட்ட சிறிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பது அவ்வளவு பெரியவர்களுக்கு அழகல்ல, மத்திய அமைச்சர்நிர்மலா சீதாராமன்தேர்தல் பத்திரத்திற்கும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறை சோதனைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளரேயெனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர்பதில் அளிக்க மறுத்துவிட்டார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *