Farmers Protest: காவல்துறைக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்!

Advertisements

போராட்டத்தில் கைது செய்தபோது 3 வயது குழந்தைக்கு இரவு 8 மணிவரை தாய் பால் கொடுக்க விடாமல் தாயை தடுத்த போலிசாரின் மனிதாபிமானம் இல்லாத செயலுக்கு  விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்தார்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய்களுக்கு ஆதரவாகக் கடந்த 10 ஆம் தேதி கன்னியாகுமரியில் போராட்டம் நடத்திய விவசாய்கள் சங்கத்தினரை கைது செய்த போலீசார் அத்துமீறி நடந்ததை கண்டித்து  நாகர்கோவிலில் விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது போராட்டத்தில் கைது செய்தபோது 3 வயது குழந்தைக்கு இரவு 8 மணிவரை தாய் பால் கொடுக்க விடாமல் தாயை தடுத்த போலிசாரின் மனிதாபிமானம் இல்லாத செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் கடந்த 10.ம் தேதி 36 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாகக் கன்னியாகுமரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தலைமையில் போலீசார் விவசாயிகளைப் போராட விடாமல் அத்துமீறிச் செயல்பட்டதாகவும், ஆர்ப்பாட்டம் நடத்த லஞ்சம் கேட்டதாகவும் கூறி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கைது செய்தபோது 3 வயது குழந்தைக்கு இரவு 8 மணிவரை தாய் பால் கொடுக்க விடாமல் தாயை தடுத்த போலிசாரின் மனிதாபிமானம் இல்லாத செயலுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *