Drunkard: மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்!

மது போதையில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்!

மது போதையில் மாமியாரை அருவாமனையால் மருமகன் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு: ஈரோடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (32). கூலி தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி ஒரே வீட்டில் மனைவி, மாமியார் கல்யாணி (65) உடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு மது போதையில் வந்த அஜித்குமார் மாமியார் கல்யாணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றி ஆத்திரம் அடைந்த அஜித்குமார் வீட்டில் இருந்த அருவாமனையை எடுத்து வந்து மாமியார் கல்யாணியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் தலை மற்றும் கையில் வெட்டு காயம் ஏற்பட்டு கல்யாணி வலியால் அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கல்யாணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமார் கடந்த வருடம் ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனை வெட்டிக்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *