ஸ்பெயின் காவல்துறையினரின் அதிரடி வேட்டை!

பிரேசில் நாட்டிலிருந்து ஐரோப்பாவுக்கு உப்புக்குள் மறைத்து கப்பலில் கடத்தப்பட்ட 1 லட்சம் கோடி மதிப்புள்ள கொகைனைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் உள்ள டெனெரிஃபில்லில் சரக்குக் கப்பலில், உப்புக்குள் 300 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த 10 டன் கொகைன் போதைப்பொருளை ஸ்பெயின் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, போதைப்பொருளை கடத்தி வந்தக் 13 பேரைக் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, கப்பலில் எரிபொருள் தீர்ந்ததால் கடலோரக் காவல் படையினருடன் கப்பலை துறைமுகத்துக்கு இழுத்துச் சென்றனர். பின்னர், பறிமுதல் செய்த கொகைன் போதைப்பொருளின் மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் ஆகும் எனக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *