Droupadi Murmu:கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் தலை வணங்குகிறேன்!

Advertisements

கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் தலைவணங்குகிறேன் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியைக் கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்கப் பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர் கொண்டு முறியடித்தனர். இந்தப் போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் தலை வணங்குவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கார்கில் போர் வெற்றி தினம் என்பது நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கும், அசாதாரண வீரத்துக்கும் தேசம் நன்றியுடன் அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும்.

1999-ம் ஆண்டு கார்கில் சிகரத்தில் பாரத அன்னையைப் பாதுகாக்கும்போது மிக உயர்ந்த தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நான் தலைவணங்குகிறேன்; அவர்களின் புனித நினைவாகப் பணிந்து வணங்குகிறேன். அவர்களின் தியாகம் மற்றும் வீரத்தால் அனைத்து நாட்டு மக்களும் உத்வேகம் பெறுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்!” என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *