
டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது. பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முன்னதாக கடந்த மாதம் 20-ந்தேதி இந்த தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது.

