fake Jewelry :போலி நகையை வைத்து  பணம் கேட்ட 3 பேர் கைது செய்து 

Advertisements
காரைக்காலில் போலி நகையை வைத்து ஒன்றரை லட்சம் பணம் கேட்ட 3 பேரை நகர காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த  லட்சுமி நாராயணன் என்பவர்  திருநள்ளார் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குவந்த 3 மர்ம நபர்கள் போலி தங்க செயினை அடமானமாக வைத்து ரூபாய் ஒன்றரை லட்சம் வழங்குமாறு கேட்டுள்ளனர். இதனை கடை உரிமையாளர்  லட்சுமி நாராயணன் சோதனைசெய்ததில், அது தங்க முலாம் பூசப்பட்ட செம்பு நகை என்பதை கண்டறிந்தார். பின்னர் அவர்களிடம் அப்படியே கொடுத்து, காரைக்கால் நகர காவல் நிலைய போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட 3 நபர்கள் கும்பகோணத்தை சேர்ந்த பரசுராமன், காரைக்காலை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் முருகவேல் என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து,   காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *