POCSO Act: பைக் வாங்கிதருவதாகக் கூறி மாணவியிடம் சில்மிஷம் செய்த பாஜக நிர்வாகி!

பைக் வாங்கிதருவதாகக் கூறி 15 வயது மகளைப் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் பள்ளி மாணவியின் தந்தை அளித்த புகாரின் கீழ் நடவடிக்கை எடுத்ததன் பெயரில் பாஜகவின் மாநில பொருளாதார பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷா மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யார் இவர்..? என்ன நடந்தது..?

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராகப் பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். எம்.எஸ்.ஷா சமீபகாலமாகப் பாஜக தலைவர்களோடு மிக நெருக்கமாக இருந்து வந்துள்ளார் என்றும், இது தொடர்பான படங்களையும் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் பாஜக பிரமுகரான எம்.எஸ்.ஷா மீது 15 வயது மதிக்கத் தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த மனுவில், தனது மகளின் செல்போனில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் இருந்து வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து என்ன நடந்தது என்பது குறித்து தனது மகளிடம் கேட்டுள்ளார். அப்போது அந்தச் சிறுமி, தன் அம்மா, சிறுமியைப் பள்ளிக்குச் செல்ல விடாமல் பாஜக பிரமுகரிடம் அழைத்துச் சென்று விட்டுள்ளாரெனச் சொல்லியுள்ளார். தொடர்ந்து அந்தப் பாஜக நிர்வாகியும் அந்தச் சிறுமியைத் தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துசென்று தனியாக இருந்துவந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இது போதாதென்று, வாட்ஸ் அப்வாயிலாக நான் கூப்பிடும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தையைக் கூறி அழைத்துசென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். தொடர்ந்து, வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று தனியார் சொகுசு விடுதியில் தங்கியும், பாலியல் வன்கொடுமை செய்து அதற்குப் பதிலாகப் புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார்.

போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு:
பாஜக பிரமுகர் எம்.எஸ்.ஷா முதலில் தனது மனைவியிடம், தங்களது கடனை அடைத்து விடுவதாகக் கூறி திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததோடு மனைவி மூலமாக மகளையும் அழைத்துசென்று பாலியல் துன்பறுத்தல் அளித்துள்ளார். இதற்கு முழுமையாகத் தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளாரென அந்தப் புகார் மனுவில், மாணவியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்

இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்.எஸ். ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4),  12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பாஜக நிர்வாகி எம்.எஸ் ஷா, கல்லூரி நடத்திவரும் நிலையில், அவர் மீது பள்ளி மாணவியின் தந்தை அளித்த புகாரின் கீழ் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது மதுரை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *