Dr. Shankarrao Chavan Government Hospital: ஒரே நாளில் 24 பேர் பலி!

மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த குழந்தைகள் 12 மற்றும் பெரியவர்கள்  12 என ஒரே நாளில்  24 பேர் பலி.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் சங்கர் ராவ் சாவன் மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த குழந்தைகள் 12 மற்றும் பெரியவர்கள்  12 என 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருந்துகள் பற்றாக்குறை காரண்மாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த 24 பேரில் 12 குழந்தைகள் என்ற தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா முழுவதும் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காராணமாக நோயாளிகளுக்குச் சரியான மருந்துகள் சரியான நேரத்தில் கிடைக்காததால் தான் உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ஒரே நாளில் 24 பேர் வுயிறிழந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில அமைச்சர் ஹாசன்முஷ்ரீஃப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பாகச் சுகாதாரத் துறை இயக்குனர், மற்றும் ஆணையர்களை விரைந்து விசாரணை நடத்தவும் மருந்துகள் இருப்பு குறித்து அறிக்கை தரவும் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் இச்சம்பவம்குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *