2023 Asian Games: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

Advertisements

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. கபடி அரையிறுதியில் 61-14 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இதேபோல ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் செபக் டக்ரா பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் பெற்றது. தாய்லாந்து அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. 2023 Asian Games

அரையிறுதிப் போட்டிவரை முன்னேறியதையடுத்து இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 21 தங்கம்,33 வெள்ளி, 37வெண்கலம் என மொத்தம் 91 பதக்கம் பெற்று பதக்கபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *