Doppakaranam: தொப்பையை குறைக்க எளிய முறை!

Advertisements

இளவயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இன்றைய சூழலில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினை தொப்பை தான்.

உடல் பருமனாக இருப்பவர்கள் என்று தான் இல்லை. ஒல்லியாக இருப்பவர்கள் கூட  தொப்பை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்.
அழகான தோற்றத்தையே கெடுக்கும் இந்த தொப்பை பிரச்சினை ஏன் வருகிறது ? என்ன வழிகளில்  குறைக்க  முடியும் என்று பார்ப்போம்.

தொப்பை வயிறு உடல் எடையை அதிகரித்து காட்டுகிறது என்பதை காட்டிலும் இது ஆரோக்கிய குறைபாட்டையும் உண்டாக்கி விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை

காரணம்;

அதாவது நமது உணவு முறையில் அதிகம் எண்ணெய் சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அது உடல் தொப்பையை உண்டாக்கிவிட செய்யலாம். இது சிறுக சிறுக படிந்து வயிற்று தொப்பையை உண்டாக்கி  விடும். எண்ணெய் பண்டங்கள் அதிகம் சேர்ப்பதால் தொப்பை உருவாகலாம்.

இரவு நேரங்களில் நீண்ட நேரம் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பவர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். அன்றாடச் செயல்களில் மாற்றம் செய்யும் போது இரவு நேரங்களில் நீண்ட நேரம் விழித்திருப்பதன் மூலம் தொப்பை போடுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

அதுமட்டுமல்ல உணவில் இனிப்பு வகைகளை அதிலும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை சேர்த்த இனிப்புகள், செயற்கை இனிப்பு சேர்த்த பானங்கள் என எல்லாமே காரணமாக அமைகிறது. உணவில் அதிக கார்போஹைட்ரேட், குறைவான புரதம், குறைவான அளவு கொண்ட நார்ச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்வதும் கூட தொப்பைக்கு காரணமாகிறது.

பாதிப்புகள்;

தொப்பை அதிகமாக இருந்தால் அது ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்க அதிக காரணம் வகிக்கிறது.
தொப்பை இருப்பவர்கள் டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கிறது.
இதயம் சம்பந்தமான கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

பெண்களுக்கு தொப்பை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரக்கூடும்.

வயிற்று கொழுப்பு வகை;

உள்ளுறுப்பு கொழுப்பு என்பது வயிற்று உறுப்புகளை சுற்றி உடலுக்குள் ஆழமாக சுற்றி இருக்கும். நீங்கள் இதை உணரவோ பார்க்கவோ முடியாது. உங்கள் தொப்பையும் வெளியே தெரியாது. வயிறு தட்டையாகவே இருக்கலாம். ஆனால் உள்ளுறுப்பு கொழுப்பு கொண்டிருக்கலாம்.

இதற்கு காரணம் உணவு மூலமாக செல்லும் கொழுப்பு தான். இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது. உடல் பருமனையும் உண்டாக்கி விடுகிறது.

சிகிச்சை;

வெந்நீர் நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் அவசியம் என்று சொல்வதுண்டு இதை வெந்நீராக்கி அவ்வப்போது குடித்து வந்தால் எண்ணெய் உணவுகள், அதிக இனிப்பு வகைகள் செரிமானக் கோளாறு பாதிப்பு இருந்தால் இதை சரி செய்ய வெந்நீர் உதவும். கொழுப்பை கரைக்க செய்பவை. உடலில் கொழுப்பை சேர விடாமல் செய்யும். தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

நெல்லிக்காய் பானம்;

தொப்பை குறைய வைக்க உதவும் சிறந்த பானம் இது.

நெல்லிக்காய் – 3
கறிவேப்பிலை தூள் – 1 டீஸ்பூன்
தேன் – இனிப்பு தேவையெனில்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸியில் சாறாக்கி எடுக்கவும். அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கறிவேப்பிலை தூள், மிளகுத்தூள், உப்பு, தேன் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ந்து குடித்து வந்தால் தொப்பை குறைவதை பார்க்கலாம்.

சோற்றுக்கற்றாழை;

சோற்று கற்றாழை மடல்களில் இருக்கும் நுங்கு போன்ற பகுதியை வெளியே எடுத்து அதை நன்றாக ஓடும் நீரில் கழுவி சுத்தம் செய்து மோருடன் சேர்த்து மசித்து குடித்து வரலாம். இதையும் வெறும் வயிற்றில் அல்லது காலை 11 மணிக்கு குடிக்கலாம். இது உடலை குளிர்ச்சியாக்கும் என்பதோடு தொப்பையையும் குறைக்கும்.

தோப்புக்கரணம்;

தொப்பைக்கு என்று தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டியதில்லை. எளிமையான முறையில் அனைவருமே செய்ய கூடிய தோப்புக்கரணம் மட்டுமே உங்கள் தொப்பையை நன்றாக குறைக்க செய்யும்.

நமது உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சரியான நேரத்தில் சரியான உணவு முறையிலும், குறிப்பிட்ட தூக்கமும், எளிமையான உடற்பயிற்சியும் உங்கள் தொப்பையை கரைக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *