பேருந்து கதவு திறந்து சாலையில் விழுந்த 10 மாணவர்கள் படுகாயம்!

புதுக்கோட்டையில் அரசு நகர பேருந்தில் ஓட்டுநரின் அலட்சியத்தால் கதவு திறந்ததால் படியில் நின்றிருந்த பள்ளி மாணவியர்கள் சாலையில் விழுந்ததில் பத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே ரங்கம்மா சத்திரத்தில் இருந்து அரசு நகரப் பேருந்து பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்றபோது ஓட்டுநரின் அலட்சியத்தால் கதவுகள் திறக்கப்பட்டது. அப்போது படிகளில்  நின்றிருந்த பத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

பெற்றோர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மாணவியர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக் குறித்து வெள்ளனூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *