த.வெ.க கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்பு..!

Advertisements

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

கரூர்க் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வீதியுலாவையும், மக்கள் சந்திப்பையும் அக்கட்சி ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *