ParisParalympics:மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசுன்னு காட்டிய நித்யா ஸ்ரீ சிவன்!

Advertisements

பாரிஸ்: பாரிசில் நடைபெறும் பேட்மிண்டனில் தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றார். ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 2 வீராங்கனைகள் பதக்கம் வென்று அசத்தினர்.

பாராலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது.பேட்மிண்டனில் இன்று(செப்., 03) தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர், இந்தோனேசியா வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்று அசத்தினார்.

ஏற்கனவே, மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் தமிழக வீராங்கணைகளான துளசிமதி வெள்ளி பதக்கமும், மணிஷா ராதாஸ் வெண்கல பதக்கமும் பெற்றுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *