ஆந்திராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமாண்ட மாநாடு!

Advertisements

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அடுத்த கேசரி பள்ளியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் பிரமாண்ட மாநில மாநாடு வருகிற ஜனவரி 5-ந் தேதி நடைபெறுகிறது.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் மாநாட்டில் 7 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்காக ஆந்திராவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பிரச்சாரம் நடந்து வருகிறது.

மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் மாநாடு நடைபெறும் இடம் அருகே உள்ள உப்பலூர் ரெயில் நிலையத்திற்கு 15 சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளதால் மாநாட்டு மேடை மற்றும் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

பணிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் துர்கா பிரசாத், அதோனி எம்.எல்.ஏ பார்த்தசாரதி, பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் திலீப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *