ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த இந்தியர்கள்…!

ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய சமூகத்தினர் “வந்தே மாதரம்” என்று கோஷமிட்டு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாடுகளுக்கான பயணத்தின் இரண்டாம் கட்டமாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றடைந்தார். அங்கு, இந்திய சமூகத்தினர் “மோடி-மோடி” மற்றும் “வந்தே மாதரம்” என்று கோஷமிட்டு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இந்தப் பயணம் குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், செய்தி பதிவிட்டுள்ளார். அதில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தரையிறங்கியதாகவும், இந்தப் பயணம், இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாயக் கூட்டாண்மைக்கு மேலும் வலு சேர்க்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் அல்பானிஸுடனான பேச்சுவார்த்தையை தான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நமது கூட்டாண்மையின் முக்கிய தூணாக விளங்கும் இந்திய புலம்பெயர் சமூகத்தினருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பும் தனக்குக் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *