தி.மு.க. ஆட்சியில் அதிகரிக்கும் பாலியல் – அமைச்சர் ரகுபதி!

Advertisements

சென்னை:

தமிழகத்தில் சமீப காலமாகப் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பள்ளி மாணவி ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை, திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை, ஓடும் ரெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொல்லை, திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்குப் பேராசிரியர் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுதொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-

* புகார் தந்தால் திமுக ஆட்சியில் நடவடிக்கை இருக்கும் என்ற நம்பிக்கை, தைரியம் வந்ததால் தான் அதிக புகார் வருகிறது.

* பெண்கள் திமுக ஆட்சியில் புகார் அளிக்கத் தைரியமாக வெளியே வருகின்றனர்.

* அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் புகார் அளிக்க அச்சப்பட்டனர் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *