
ஒவ்வொரு குடும்பமும் ஏதேனும் ஒரு திட்டம்மூலம் பயன்பெறுவதால் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் ஒலித்துக்கொண்டு இருப்பதாகவும், மோடியும் அமித்ஷாவும் ரியல் எஸ்டேட் அதிபர்கள்போல் நாட்டைக் கொள்ளையடித்து அம்பானிக்கும், அதானிக்கும் விற்பனை செய்வதாகஅமைச்சர் செஞ்சி மஸ்தான் விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம்செஞ்சி அடுத்த அப்பம்பட்டு பகுதியில் செஞ்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் விஜயகுமார் ஏற்ப்பாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதேபோல் நாட்டார்மங்கலம் பகுதியில் வல்லம் ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதாரவிக்குமார் ஏற்பாட்டிலும் மற்றும் மேல்மலையனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வளத்தி பகுதியில் மேல்மலையனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் ஏற்பாட்டிலும் நடைபெற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துக் கொண்டு பொது மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று ஒவ்வொரு குடும்பமும் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் பயன்பெறுவதால் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் ஒலித்துக் கொண்டு இருப்பதாகவும், பிரதமர் மோடியும் அமித்ஷாவும் ரியல் எஸ்டேட் அதிபர்கள்போல் நாட்டைக் கொள்ளை அடித்துக் கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானிக்கும், அதானிக்கும் விற்பனை செய்து வருவதாகவும் இதனை நாட்டு மக்களும் தெரிந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.



