Half Yearly Exam: அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!

Advertisements

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளில்அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 3 மற்றும் 4 -ஆம் தேதிகளில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த சூழ்நிலையில் , மிக்ஜாம் புயலின் தாக்கம் சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் அதிகமாக இருந்தது.

தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. படிப்படியாக நிலைமை சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவளூர்.ஆகிய  4 மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் நடைபெற இருந்த   அரையாண்டுத் தேர்வை பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் நலன் கருதி ஒத்தி வைத்துள்ளது.

மாணவர்களால் குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராக முடியாது என்பதால் டிசம்பர் 7முதல் 22- ஆம் தேதி வரை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது கல்வித்துறை.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் நிலமை சீரானதும் அரையாண்டுத் தேர்வு அந்தந்த மாவட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் மாற்றமாவட்டங்களில் திட்டமிடப்படி  11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 7-ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை அரையாண்டு  தேர்வுகள் நடைபெறும் என்று  பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *